மேஷம்
எந்த ஒரு பணியையும் மேற்கொள்வதற்கு முன்னால், எச்சரிக்கையுடன் சிந்தித்துச் செயல்பட வேண்டும். அவசர முடிவுகள், நீண்டகாலமாகக் கடும் உழைப்பினால் நீங்கள் சாதித்த விஷயங்களைப் பெரிதும் பாதிக்கும். இன்றைய காலை சிறிது பதற்றத்துடன் தொடங்கினாலும், மாலையில் குழந்தைகளுடன், நேரத்தைக் கழித்து அவர்களது வீட்டுப் பாடத்தில் உதவிசெய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ரிஷபம்
இன்றைய நாளைப் பொறுத்தவரை, உங்களுக்குத் தொடர்ந்து பிரச்சினைகள் கொடுத்துவந்த ஒருவரை நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்களது வருங்கால நலனைக் கருத்தில்கொண்டு, அவருடன் மோதல் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. நாகரிகமாகப் பழகும் உங்கள் தன்மையைத்தான் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
மிதுனம்
இன்றைய தினத்தில் நீங்கள் தொழிலைவிட, உடல் நலத்தின் மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. நீங்கள் உடற்பயிற்சி செய்ய கூடுதல் நேரம் எடுத்துக் கொள்வீர்கள். சந்தைப்படுத்தல், விளம்பரத் துறையில் இருப்பவர்களுக்கு இது சிறந்த நிறமாக இருக்கும். உங்களது சிறந்த மார்க்கெட்டிங் உத்தி மூலம், அதிகபட்ச லாபத்தை ஏற்படுத்த முடியும்.
கடகம்
இன்றைய நாளில் நீங்கள் வேடிக்கையான மனநிலையில் இருப்பீர்கள். வேடிக்கை, வம்புப் பேச்சுகள், சிரிப்பு, குதூகலம் நிறைந்து, இன்றைய நாளில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நாளின் பிற்பகுதியில், நீங்கள் உங்கள், வழக்கமான அமைதியான நிலைக்குத் திரும்பி, பணியில் கவனம் செலுத்தி, வேலையை நிறைவுசெய்வீர்கள்.
சிம்மம்
இன்று நீங்கள் பணியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். ஈடுபாட்டுடன் வேலை செய்து பணிகளை நிறைவுசெய்வீர்கள். உங்கள் திட்டத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் வேலை செய்யும் முறையை சிறிது மாற்றிக் கொள்வது உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும்.
கன்னி
கூட்டாளித்துவத் திட்டத்தை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. நீங்கள் தனிப்பட்ட முறையில் தொழில் செய்தால், உங்கள் செயல்திறன் மூலம், மற்றவரைவிட சிறப்பாகச் செயல்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எவருடைய உதவியும் இல்லாமல், நீங்கள் உங்கள் பணியை மிகச் சிறப்பாக நிர்வாகம் செய்வீர்கள்.
துலாம்
இன்றைய நாளைப் பொறுத்தவரை, மக்கள் கூறும் அனைத்தையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். அதைப் பற்றி எதுவும் குறைகூற மாட்டீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உங்களது நீக்குப்போக்காக அணுகுமுறையின் மூலம், உங்களது கருத்துகளை நியாயப்படுத்தி எடுத்துக்கூற முடியும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் அறிவுப்பூர்வமாகச் சிந்திக்காமல், மனப்பூர்வமாகச் சிந்திப்பீர்கள். உணர்ச்சிகளை இன்று கட்டுப்படுத்த முடியாமல் இருப்பீர்கள். அவ்வாறு செய்ய முயற்சி செய்யவும் கூடாது. ஆனால் உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்கவும். ஏனென்றால் இதன் மூலம், பொதுமக்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டு.
தனுசு
இன்று உங்கள் மேலதிகாரிகள், உங்கள் மீது நம்பிக்கை வைத்து பல கூடுதல் பொறுப்புகளை வழங்குவார்கள். நீங்களும் அதற்காகக் கடுமையாக உழைத்து, உங்களது திறமையை நிரூபிப்பீர்கள். உங்களது உழைப்பு பாராட்டைப் பெறும். ஊக்கத்தொகை கிடைத்தால் ஆச்சரியப்பட வேண்டாம். நீங்கள் அதற்குத் தகுதியானவர்தான்.
மகரம்
உங்களது, வெளிப்படையான, நேரடியான அறம் அணுகுமுறையின் மூலம், உங்களுக்கு நெருக்கமானவர்கள் மனத்தை நீங்கள் புண்படுத்தக்கூடும். உறவுகளில் ஏற்பட்ட விரிசல்களை நீக்கவும் மனக்காயங்களைப் போக்கவும் நீங்கள் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். இருந்தாலும் உறவுகளைச் சீர்செய்வதற்கான உங்களது முயற்சி எதிர்பார்த்த பலனைக் கொடுக்காமல் இருக்கும் வாய்ப்பு உள்ளது.
கும்பம்
இன்று நீங்கள் காதல் வயப்படக்கூடும்! திருமணம் ஆகாதவர்கள், காதல் உணர்வின் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமணமானவர்களுக்கும் இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். இருவரும் ஒன்றாகச் சிறந்த முறையில் நேரத்தைச் செலவிடுவார்கள். பழைய புகைப்படங்களைப் பார்த்து, மலரும் நினைவுகள் குறித்த எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.
மீனம்
ஒரேவிதமான தினசரி பணிகளின் காரணமாக மந்தமாக உணர்வீர்கள். ஏதேனும் ஒரு இடத்திற்குச் சென்று நேரத்தைச் செலவிட வேண்டும் என்று விரும்புவீர்கள். தற்போதைய பணிகளில் நீங்கள், கடுமையாகத் தொடர்ந்து வேலை செய்துவந்ததன் காரணமாக, இந்த ஓய்வு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இதையும் படிங்க: மனதை உருக்கும் குரல்... தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவாரின் பாடல்