மேஷம்
இன்று உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்ட நாள் என்றே கூற வேண்டும். உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் மகிழ்ச்சியாக இருந்து, அவர்கள் மனதை வெல்ல முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நண்பர்கள் உடன் விருந்துக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும்.
ரிஷபம்
இன்றைய தினம் சில அதிர்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கின்றன. திட்டமிட்டபடி அல்லது எதிர்பார்க்கப்பட்டபடி எதுவும் நடக்காது. எதிர்பாராத திருப்பங்கள் காரணமாக பின்னடைவுகள் ஏற்படலாம். ஆனால் கடவுளின் ஆசி காரணமாக, இந்த நிலைமையை எதிர்கொண்டு முன்னேறிச் செல்வீர்கள். மாலையில் நிலைமை மேம்படக் கூடும். பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லாமல் இயல்பு நிலை ஏற்படும்.
மிதுனம்
உங்கள் மனதுக்குப் பிடித்த விஷயங்களில் நீங்கள் ஈடுபடுவீர்கள். உதவி கோரும் மக்களுக்கு நீங்கள் உதவ முன் வருவீர்கள். அதனால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களது தாராள மனப்பான்மை காரணமாக, உங்கள் சமூக அந்தஸ்து உயர்ந்து அனைவரையும் நம்பிக்கையும் பெறுவீர்கள்.
கடகம்
உங்களது பணியில், முக்கிய நாளாக இருக்கும். பணி மாற்றம், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு ஏற்படலாம். உங்களது கடமைகளும் அதிகரிக்கும். புதிய வேலை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஒரு நல்ல வேலை வாய்ப்பை நீங்கள் நிராகரிக்க கூடும்.
சிம்மம்
பழைய நட்புகளை புதுப்பிப்பதற்கும், புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இது சிறந்த நாளாக இருக்கும். நண்பர்களும் உறவினர்களும் உங்கள் வீட்டிற்கு வருகை தருவார்கள். வீட்டில் குதூகலமான சூழ்நிலை நிலவும். விருந்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் நீங்கள் சிறந்த வகையில் விருந்து அளிப்பீர்கள்.
கன்னி
இன்று உங்கள் உறவுகள் மற்றும் தொடர்புகள் மீது உணர்வுகள் ஆதிக்கம் செலுத்தும். உணர்ச்சி ரீதியான பாதிப்பின் காரணமாக நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். எனினும் மற்றவர்கள் கூறும் விஷயத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், உள்ளார்ந்த உணர்வுகளை மதித்து நடந்துகொள்வீர்கள்.
துலாம்
இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பீர்கள். அது பணியில் உள்ள ஈடுபாடு அல்லது குடும்பத்தின் முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். வர்த்தகத்தில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக நிறைவேற்றி, நல்ல முடிவுகளை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்
உறவுகளை நீங்கள் அணுகும் விதத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவது நல்லது. நெருங்கிய உறவினர்களுடன், பாதிக்கப்பட்டுள்ள உறவுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவும் உருவாகிறது. இந்த முயற்சியில் தோற்றுப் போகாமல் இருக்க கவனத்துடன் செயல்படவும்.
தனுசு
இன்றைய தினத்தைப் பொறுத்தவரை மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொழில் ரீதியான உங்களது அணுகு முறையின் காரணமாக, கடினமான பிரச்னைகளையும் எளிதாக கையாள்வீர்கள். மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பதால், உங்களுக்கு நண்பர்கள் பலர் இருப்பார்கள்.
மகரம்
இன்று, பணியிடத்தில் அங்கீகாரமும் பாராட்டும் காத்திருக்கின்றன. சக பணியாளர்கள் உங்கள் வெற்றியை பார்த்து பொறாமைப்படாமல், அவர்கள் உங்களுக்கு ஊக்கமளித்து மகிழ்வார்கள். இதனால் புதிய பணிகளில் வரும் சாதனைகளை திறமையாக எதிர்கொள்வீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள், சிறிது காலம் பொறுக்கவும். தற்போது நிலைமை சாதகமாக இல்லை.
கும்பம்
இன்று, கவலையும் மகிழ்ச்சியும் கலந்த நாளாகும். பிளம்பிங் பணி, துப்புரவு பணி, மளிகை சாமான் வாங்குதல், சமைத்தல் போன்ற பணிகளை மேற்கெள்வீர்கள். மாலை நேரத்தில், மசாஜ் காரணமாக, சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். வலிகளை உணர்ந்த பிறகுதான், சந்தோஷத்தின் மதிப்பை உணருகிறோம்.
மீனம்
உங்களுக்கு அதிக அளவில் நண்பர்கள் இருந்தாலும், சில குறிப்பிட்ட நண்பர்களே உங்களுக்கு நெருக்கமாக இருப்பார்கள். சுருக்கமாகக் கூறுவதென்றால், உங்கள் நெருங்கிய நண்பர்களுடன், சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு, நிம்மதியாக இருப்பீர்கள்.
இதையும் படிங்க: காந்தியின் கனவுகளை இன்றும் சுமக்கும் தே கல்லுப்பட்டி ஆசிரமம்