மேஷம்
உங்கள் மனத்திற்குப் பிடித்தவர்களை மகிழ்விக்க நீங்கள் முயற்சி செய்வீர்கள். அவர்கள் மனதைக் கவர புதுமையான முயற்சி மேற்கொள்வீர்கள். உறவினர்கள் தொடர்பாக அதிருப்தி இருக்கக்கூடும். எனினும் புதிய நண்பர்களுடன் மாலையில் விருந்துக்குச் செல்வீர்கள்.
ரிஷபம்
இன்றைய நாளைப் பொறுத்தவரை, உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கும், கோரிக்கை வைப்பதற்கும் சாதகமான நாள் அல்ல. சச்சரவுகள், விவாதங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். சச்சரவுகளைத் தவிர்க்கவில்லை என்றால், அது உங்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இருக்கும். அதனால் உங்களது புகழும் சுயமரியாதையும் பாதிக்கப்படலாம். கவனமாகச் செயல்படவும்.
மிதுனம்
இன்று அதிர்ஷ்ட தேவதை உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார். நீங்கள் பொதுவாகக் கூச்ச சுபாவம் உள்ளவர்கள். ஆனால் இன்று வித்தியாசமாக, நீங்கள் பொதுவெளியில் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். இந்தத் தற்காலிக மாற்றம் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.
கடகம்
இன்று விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படலாம். அதனால் மனம் வருத்தம் கொள்ளலாம். எனினும் அதைத் திறமையாகக் கையாண்டு, பாதிப்பில்லாமல் வெளிவருவீர்கள். வெற்றி என்பது சுலபமான விஷயம் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காக கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும்.
சிம்மம்
புத்துணர்வு மற்றும் புத்துயிர் - இந்த இரண்டு சொற்கள் இன்றையத் தத்துவமாக இருக்கும். உங்களைப் புதுப்பிக்கச் செய்வது என்பது, புதிதாக எதையேனும் ஏற்படுத்துவது என்று அர்த்தமல்ல. நீங்கள் வந்த வழியே திரும்பிப் பார்த்து ஆராய்ந்து சிந்திப்பீர்கள். தொழில் ரீதியான சந்திப்புகளின் மூலம் அதனைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் கைவிடாதீர்கள்.
கன்னி
வர்த்தகம் மற்றும் சந்தோஷம் ஆகிய இரண்டும் இன்று உங்களுக்கு கைகூடும். சமூக கூட்டங்களால் நன்மை கிடைக்கும். நீங்கள் எந்த அளவிற்கு நேரத்தைச் செலவிடுகிறீர்களோ அந்த அளவுக்குப் பணம் செலவாகும். எனினும் நீங்கள் சிந்தித்து செலவு செய்வது நல்லது.
துலாம்
தொடர்பு மற்றும் வெளிப்பாடு- பணியிடத்தில் இந்த இரண்டு விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த இரண்டையும் நீங்கள் சிறந்த வகையில் கையாளும் திறன் உடையவர்கள். வர்த்தக ஆலோசனை என்றாலும் கூட்டங்கள் என்றாலும் நீங்கள் எதிலும் சிறந்து விளங்குவீர்கள். மக்களைத் தொடர்புகொள்வது உங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது. எனினும் மாலைப்பொழுது உங்கள் மனத்திற்குப் பிடித்தவருடன் நேரத்தைச் செலவழித்து மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் விரும்புவீர்கள்.
விருச்சிகம்
உறவுகளை நீங்கள் அணுகும் விதத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவது நல்லது. நெருங்கிய உறவினர்களுடன், மனம் சஞ்சலத்தில் உள்ள பாதிக்கப்பட்ட உறவுகளை இணைக்க முயற்சி எடுக்கலாம். இந்த முயற்சியில் தோற்றுப் போகாமல் இருக்க கவனத்துடன் செயல்படவும்.
தனுசு
இன்றைய நாளைப் பொறுத்தவரை மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொழில் ரீதியான உங்களது அணுகுமுறையின் காரணமாக, கடினமான பிரச்சினைகளையும் எளிதாகக் கையாளுவீர்கள். மக்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பதால், உங்களுக்கு நண்பர்கள் பலர் இருப்பார்கள்.
மகரம்
கடந்த கால நினைவுகள் உங்கள் மனத்தில் அலைமோதி, அதன் உந்துதல் காரணமாக, பழைய நண்பர்களை நீங்கள் சந்திப்பீர்கள். மற்றொருபுறம், உங்களுக்கு நெருக்கமானவர்கள், உங்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது போன்ற உணர்வு உங்களிடம் இருக்கும். எனினும் மனத்திற்குப் பிடித்தவர்கள் உடன், இனிமையாக மாலைப் பொழுதை கழிப்பது, சோர்வை நீக்கி, அடுத்த நாள் பணிக்கு நீங்கள் தயாராக உதவியாக இருக்கும்.
கும்பம்
இன்று, கவலையும் மகிழ்ச்சியும் கலந்த நாளாகும். பிளம்பிங் பணி, தூய்மைப் பணி, மளிகைப்பொருள்கள் வாங்குதல், சமைத்தல் போன்ற பணிகளின் காரணமாக கடினமாக உணர்வீர்கள். ஆனால் மாலை நேரத்தில், மசாஜ் காரணமாக, சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். வலிகளை உணர்ந்த பிறகுதான், சந்தோஷத்தின் மதிப்பை உணருகிறோம்.
மீனம்
உங்களுக்குத் தெரிந்தவர்கள் பலர் இருந்தாலும், ஒரு சிலரிடம் மட்டுமே நீங்கள் நெருக்கமாகப் பழகும் தன்மைகொண்டவர். இன்றைய நாளில், சமூக நடவடிக்கைகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் நீங்கள் பலரை சந்தித்து உரையாடுவீர்கள்.
இதையும் படிங்க: EXCLUSIVE INTERVIEW: ’இப்போ வெண்கலம் ஓகே, ஆனா நெக்ஸ்ட் தங்கம்தான்...’ - லவ்லினா!