ஸ்ரீநகர் : உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து (சட்டப்பிரிவு 370) நீக்கத்துக்கு பின்னர், அம்மாநிலத்துக்கு முதன் முறையாக 3 நாள்கள் பயணமாக சென்றார்.
அங்கு ஜம்மு, காஷ்மீர் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் உளவுத்துறை, பாதுகாப்பு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அவர் தனது பயணத்தை ஸ்ரீநகரிலிருந்து தொடங்குவார், அங்கு அவர் முதலில் பாதுகாப்பு அலுவலர்கள், பஞ்சாயத்து மற்றும் மாவட்ட உள்ளாட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடன் சந்திப்புகளை நடத்துவார்.
தொடர்ந்து, அமித் ஷா ஷார்ஜா-ஸ்ரீநகர் விமான சேவையை ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார். பின்னர், குப்வாராவின் ஹந்த்வாரா மற்றும் ஜம்மு பகுதியில் உள்ள உதம்பூர் மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதையடுத்து ஸ்ரீநகர் செல்லும் அமித் ஷா, அக்.25 ஆம் தேதி டெல்லி திரும்புவார். அமித் ஷாவின் வருகையை முன்னிட்டு காஷ்மீர் மற்றும் ஜம்மு மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, 15 பயங்கரவாதிகள் ஜம்முவில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ஜம்முவில் 900க்கும் மேற்பட்டவர்கள் தடுப்புக்காவலில் உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370, 2019ஆம் ஆண்டு ஆக.5ஆம் தேதி நீக்கப்பட்டது, தொடர்ந்து மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் உருவாக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : 'ஆட்சி, கட்சியில் அளப்பறிய பங்களிப்பு- 57இல் அமித் ஷா.. பிரதமர் வாழ்த்து!