ETV Bharat / bharat

''ஸ்பைடர் மேன்'' பட நட்சத்திரங்கள் மும்பை வருகை - இணையத்தில் புகைப்படங்கள் வைரல்! - நீடா அம்பானியின் கலாச்சார மையம்

ஸ்பைடர் மேன் பட நட்சத்திரங்களான டாம் ஹாலண்ட், ஜெண்டயா இருவரும் இன்று மும்பை வந்துள்ளனர். இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Hollywood
Hollywood
author img

By

Published : Mar 31, 2023, 5:25 PM IST

ஹைதராபாத்: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியான நீடா அம்பானி, மும்பையில் பல்துறை கலாசார மையம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது இந்தியாவின் முதல் பல்துறை கலாசார மையம் என்று கூறப்படுகிறது. இதில், நாட்டில் உள்ள சிறந்த கலை, கலாசாரங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இசை, நாடகம், கைவினைப்பொருட்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படவுள்ளன. இந்த மையத்தில் குழந்தைகள், மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதி இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையம் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கலாசார மையம் இன்று(மார்ச்.31) திறக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், ஹாலிவுட் நட்சத்திரங்களான டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா இருவரும் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் நீடா அம்பானியின் கலாசார மைய திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் விமானம் மூலம் இன்று மும்பை வந்தடைந்தனர். கலினா விமான நிலையத்தில் இவர்களைக் கண்ட ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

இருவரும் சிறிது நேரத்தில் காரில் ஏறி சென்றுவிட்டனர். விமான நிலையத்தில் இவர்களைக் கண்ட ரசிகர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகின்றன. இருவரும் முதல் முறையாக மும்பைக்கு வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் ஸ்பைடர் மேன் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமடைந்தனர். இவர்கள் கடந்த 2016ஆம் ஆண்டு, 'ஸ்பைடர் மேன்: ஹோம் கமிங்' படப்பிடிப்பின் போது முதல் முறையாக சந்தித்துக்கொண்டனர். பின்னர் 'ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்' படத்தில் நடித்தனர். டாம் ஹாலண்ட், ஜெண்டயா இருவரும் காதலித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெப் சீரிஸ் பார்த்துக் கொண்டிருந்த இளைஞரை போலீசில் பிடித்துக்கொடுத்த பொதுமக்கள்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.