ETV Bharat / bharat

பள்ளிகளுக்கு ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை

அதிகபட்ச வெப்பநிலை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஏப்ரல் 24 முதல் ஜூன் 14 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Chhattisgarh govt declares summer holiday in schools as state reeling under heatwave

author img

By

Published : Apr 21, 2022, 3:59 PM IST

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை செல்வதைக் கருத்தில் கொண்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஏப்ரல் 24 முதல் ஜூன் 14 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 15ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சத்தீஸ்கரின் ராய்ப்பூர், துர்க், பிலாஸ்பூர், சர்குஜா மாவட்டங்களில் வெப்பநிலை 43 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவானது.

இதனால் கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்குமாறு கோரிக்கைகள் எழுந்தன. அதனடிப்படையில் இன்று (ஏப். 21) விடுமுறை அறிவிப்பு வெளியாகியது. மேலும் சத்தீஸ்கர் பள்ளிக்கல்வித்துறை மே 15ஆம் தேதி வரை பள்ளிகளை திறந்துவைக்க திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீண்டும் மாணவர்களுக்கு விடுமுறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.