புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில், புதுச்சேரியில் 1715 நபர்களுக்கும், காரைக்காலில் 278 பேருக்கும், ஏனாமில் 54 பேருக்கும், மாஹேவில் 45 பேருக்கும் என மொத்தம் 2,093 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் தற்போது 10,393 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 3 பேர் உயிரிழந்துள்ளதால், கரோனாவினால் இதுவரை புதுச்சேரி மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு 1,893ஆகும். அதேபோல், பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 2,987 பேர் செலுத்திக்கொண்டனர்.
இதையும் படிங்க: குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! எங்கள் முப்பாட்டன் முருகன் பெரும்புகழ் போற்றி!