ETV Bharat / bharat

ஞானவாபி வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண இந்து தரப்பு தயாராக இல்லை - வழக்கறிஞர் தகவல்!

Gyanvapi case: ஞானவாபி வழக்கில், நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண இந்து தரப்பு தயாராக இல்லை என்றும், தாங்கள் சமரசத்துக்கு தயாராக இல்லை என்றும் வழக்கறிஞர் தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 17, 2023, 5:40 PM IST

வாரணாசி (உத்தரப்பிரதேசம்): ஞானவாபி வழக்கில், இந்து தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் விஷ்னு சங்கர் ஜெயின், நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவித்தார். முன்னதாக, விஷ்வ வேதிக் சனாதன சங்கத்தின் சர்வதேச தலைவர் ஜிதேந்திர சிங் பிசன், அஞ்சுமன் இன்டெஜாமியாவின் ‘நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு’ என்பதை முன்மொழிந்த பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக இந்து தரப்பின் வழக்கறிஞர் விஷ்னு சங்கர் ஜெயின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இதில் சட்டப்பூர்வ மதிப்புகள் இல்லை. சிபிசியின் உத்தரவு 23 ஆனது, அனைத்து தரப்பும் ஒத்துக்கொள்ளாத வரையில், சமரசத்தை உருவாக்க முடியாது என தெரிவித்து உள்ளது. நாடு மற்றும் சமூகத்தில், ஒட்டுமொத்த சமுதாயத்தின் பிரதிநிதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டால், தனிநபரோ அல்லது கட்சியோ தீர்வு காண விரும்பினாலும், அது அவர்களால் முடியாது.

எனவே, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண முயல்வது சிபிசி-இன் கீழ் முடியாத ஒன்று. அதேநேரம், இது சட்டப்பூர்வமாக சாத்தியமற்றது. எங்களது கட்சி அல்லது தனிநபரும் தீர்வுக்குத் தயாராக இல்லை. இந்த ஊடகத்தின் வாயிலாக நான் ஒன்றைக் கேட்கிறேன். இந்த விவகாரத்தில் எப்படி தீர்வோ அல்லது சமரசமோ செய்து கொள்ள முடியும்? ஒரு இடத்தில் சமரசம் ஏற்பட வேண்டும் என்றால், நீங்கள் சில உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டும்.

அதேபோல், மற்றொரு தரப்பில் சில உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டும். நாங்கள் ஒரு இன்ச் அளவிலான நிலத்தைக் கூட கொடுப்பதற்கு தயாராக இல்லை. எங்களுக்கு அனைத்து பகுதிகளும் வேண்டும். நீங்கள் (முஸ்லீம் தரப்பு) ஒரு கோயிலை மசூதியாகப் பயன்படுத்தி உள்ளீர்கள். கோயில் வளாகத்தை தவறாகப் பயன்படுத்தியதற்கு முஸ்லீம் தரப்பு மன்னிப்பு கோர வேண்டும். எனவே, இங்கு சமரசத்திற்கு இடமில்லை” என தெரிவித்து உள்ளார்.

ஞானவாபி வழக்கு: 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் பழமை வாய்ந்த வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை அறிவியல் ரீதியான ஆய்வு மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதற்கு அனுமதி வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும் அஞ்சுமன் இன்டெஜாமியா மசாஜித் நிர்வாக கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் தலைமையில் விசாரணைக்கு வந்த நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவில் வேறுபாடான கருத்து இல்லை எனவும், இந்திய தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 4 முதல் இந்திய தொல்லியல் துறை ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Gyanvapi mosque case: ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு தொடர்பான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.