புதுச்சேரி: மனுதர்ம சாஸ்திரத்தை கொளுத்தும் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்றது. அப்போது திடீரென அங்கு வந்த இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் திடீரென தந்தை பெரியார் திராவிடர் கழகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் திடீரென பாஜகாவினர் மற்றும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் சாலையோரத்தில் இருந்த கற்களை தூக்கி வீசி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது பாதுகாப்புக்கு இருந்த போலீசார் மீதும் கற்கள் பட்டன.
இதனையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் கற்கள் வீசினர். தொடர்ந்து இருதரப்பினரும் நடு ரோட்டிலேயே கற்களை வீசி தாக்கிக் கொண்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் இந்து முன்னணியை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைப் போராட்டத்தில் நாராயணசாமி பங்கேற்பு