ETV Bharat / bharat

துர்கா பூஜை: அரக்கர்களின் சிலைக்கு பதிலாக மகாத்மா காந்தியின் சிலை..?  சர்ச்சையில் சிக்கிய இந்து மகாசபா... - DURGA PUJA

மேற்குவங்கத்தில் அகில பாரதிய இந்து மகாச சார்பில் நடந்த துர்கா பூஜையில், அரக்கர்களுக்கு பதிலாக மகாத்மா காந்தியின் சிலை இடம் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

துர்கா பூஜையில் அரக்கர்களின் சிலைக்கு பதிலாக மகாத்மா காந்தியின் சிலை? - சர்ச்சையில் சிக்கிய இந்து மகாசபா

author img

By

Published : Oct 3, 2022, 10:50 AM IST

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் மிகப் பிரம்மாண்டமாக துர்கா பூஜை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் கொல்கத்தாவில் அகில பாரதிய இந்து மகாசபா சார்பில் துர்கா பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பூஜையில் துர்கா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அரக்கர்களின் சிலைகளுக்கு மத்தியில் மகாத்மா காந்தியின் சிலையும் வைக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து அகில பாரதிய இந்து மகாசபாவின் மாநிலத் தலைவர் மொஹந்தோ சுந்தர் கிரி கூறுகையில், “காந்தியை நாங்கள் தேசத்தந்தையாக நம்பவில்லை. இருப்பினும், மகாத்மா காந்தி உடன் எங்களுக்கு தற்செயலான ஒற்றுமையுள்ளது. இந்த பூஜைக்கு அனைத்து அனுமதி பெற்றுள்ளோம். இப்போது, அரசு தரப்பில் பூஜைகளை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

அதனால் துர்கா சிலையின் அருகிலிருந்த காந்தியின் சிலையை மாற்றிவிட்டோம் எனத் தெரிவித்தார். இதுதொடர்பாக கொல்கத்தா காவல்துறையின் தரப்பில், “கொல்கத்தாவில் எந்தவொரு துர்கா பூஜைக்கும் காவல்துறை மறுப்பு தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேற்கு வங்க செய்தித் தொடர்பாளர் குனல் கோஷ் கூறுகையில், இது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. இதைவிட இழிவான செயல் எதுவும் இருந்து விட முடியாது என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதியை அகில பாரதிய இந்து மகாசபா கருப்பு தினமாக அனுசரித்ததும், சில ஆண்டுகள் இந்த அமைப்பு தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ’காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்எஸ்எஸ்க்கு உரிமை உண்டு’ - தமிழிசை சௌந்தரராஜன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.