ETV Bharat / bharat

ஆங்கிலத்துக்கு மாற்று இந்திதான் - அமித் ஷா சர்ச்சை கருத்து!

இந்தியாவில் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி பேசுங்கள், இந்தியை நாட்டில் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்ற வேண்டும் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்துக்கு மாற்று இந்திதான் - அமித்ஷா சர்ச்சை கருத்து!

author img

By

Published : Apr 8, 2022, 3:17 PM IST

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கில மொழிக்குப் பதிலாக இந்தி மொழியைப் படிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். மேலும் இந்தி மொழி மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கலாம் என சர்ச்சையான கருத்துகளை கூறியுள்ளார். அவரது இந்த கருத்துக்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தின் 37ஆவது அலுவல் மொழிக் கூட்டம் நேற்று (ஏப்ரல் 7) டெல்லியில் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கிப் பேசினார். இக்கூட்டத்தில் பேசிய அவர், 'ஆட்சி மொழியே அலுவல் மொழி என பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகவும், இந்த முடிவு இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும்’ எனவும் கூறினார்.

மேலும் கூறுகையில், 'இந்திய அமைச்சரவையில் 70% நிகழ்ச்சி தொகுப்புக்கான கோப்புகள் இந்தியிலேயே உள்ளது. இந்தி மொழி மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க தற்போது நேரம் வந்துள்ளது. எனவே அனைவரும் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். அந்தந்த வட்டார மொழிகளைவிட, இந்தி மொழி எளிமையாக கற்றுக்கொள்ளும் வகையில் இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா இவ்வாறு தெரிவித்த கருத்திற்கு பல தரப்பட்டவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூக வலைதளங்களிலும் இது வைரலாகி கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க:குற்றவியல் மசோதா 2022 மாநிலங்களவையில் தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.