இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 68 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 412 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 55 லட்சத்து 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
தேர்தலையொட்டி 7,884 வாக்கு சாவடிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை ஒரே கட்சி தொடர்ந்து இருமுறை ஆட்சி அமைத்த வரலாறு இல்லை.
பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் உள்ளிட்டவை போட்டியிட்டாலும் ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.
வாக்குப்பதிவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 30 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறுகிறது.