ETV Bharat / bharat

ஹிமாச்சலப்பிரதேசத்தின் தொப்பி அரசியல்... இம்முறை எந்த தொப்பி ஆளப்போகிறது? - மேல் ஹிமாச்சல்

ஹிமாச்சலப்பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், அதன் பாரம்பரிய தொப்பி அரசியல் குறித்த சுவாரசியத் தகவல்களை பார்க்கலாம்.

Himachal
Himachal
author img

By

Published : Nov 7, 2022, 9:59 PM IST

ஷிம்லா: தேர்தல் நேரங்களில் பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான குறியீடுகளை தவிர்ப்பார்கள். அவர்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறார்கள் என்பதைப் பற்றி கூறாமல் மெளனம் காப்பார்கள். ஆனால், ஹிமாச்சலில் உள்ள மக்கள் சற்று வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். அவர்கள் தங்களது ஆதரவை பகிரங்கமாகத் தெரிவிக்கிறார்கள். அதுவும் வித்தியாசமான முறையில் தெரிவிக்கிறார்கள். ஆம், மலை மாநிலமான ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள வாக்காளர்கள் குறிப்பிட்ட கட்சிக்கான ஆதரவை தங்களது 'பாரம்பரிய பஹாரி தொப்பி' மூலம் தெரிவிக்கிறார்கள்.

பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், காவி அல்லது மெரூன் நிறத்திலும், காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் பச்சை நிறத்திலும் தொப்பியை அணிந்துள்ளனர். இந்த பச்சை, காவி என்ற பிரிவு, முறையே மாநிலத்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் இருந்து வந்தது. ஹிமாச்சலப்பிரதேசம் புவியியல் ரீதியாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று மேல் ஹிமாச்சல் மற்றும் கீழ் ஹிமாச்சல். இந்தப் பிரிவு ஹிமாச்சல் அரசியலை தீர்மானிக்கும் அடையாளங்களில் ஒன்றாகும்.

அதேபோல், இந்தப் பிரிவின் அடிப்படையில் தொப்பிகளை அணியும் போக்கு அரசியல் கட்சிகளால் வந்தது. ஆறு முறை காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த வீர்பத்ர சிங்கிற்கு பச்சை தொப்பி அணிவது பிடிக்கும். அவர் அணிவதைப் பார்த்து, அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக பச்சை தொப்பியை அணியத்தொடங்கினார்கள். அதன் பிறகு, பாஜக தலைவரும், இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவருமான பிரேம் குமார், மெரூன் நிற தொப்பியை தனது ட்ரேட் மார்க்காக மாற்றினார்.

1985ஆம் ஆண்டு முதல், ஹிமாச்சலப்பிரதேசத்தில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஆட்சி மாறிக்கொண்டே இருந்தது. எந்த அரசியல் கட்சியும் அடுத்தடுத்து இருமுறை ஆட்சியைப் பிடிக்கவில்லை. தொப்பிகளின் நிறம் மாறிக்கொண்டே இருக்கிறது.

புவியியல் அடிப்படையில் பார்த்தால், யஷ்வந்த் பர்மர், ராம்லால் தாகூர், வீர்பத்ர சிங் ஆகியோர் மேல் ஹிமாச்சலத்தைச் சேர்ந்தவர்கள், சாந்தகுமார், பிரேம் குமார், ஜெய்ராம் தாகூர் ஆகியோர் கீழ் ஹிமாச்சலத்தைச் சேர்ந்தவர்கள். இருப்பினும், 2017ஆம் ஆண்டில் ஜெய்ராம் தாகூர் மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், மாநிலத்தில் தொப்பி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார்.

தான் ஹிமாச்சலத்தின் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கு முதலமைச்சர் அல்ல, முழு ஹிமாச்சலத்தின் முதலமைச்சர் என்று அவர் கூறினார். அதேபோல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், "பச்சை தொப்பியும் எங்களுடையது, சிவப்பு தொப்பியும் எங்களுடையதே. மேல் ஹிமாச்சலமும் நம்முடையது, கீழ் ஹிமாச்சலமும் நம்முடையது" என்று கூறுகிறார்.

ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத்தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். தலைமைச்செயலகத்தில் எந்த நிறத்தொப்பி இருக்க வேண்டும் என்பதை அன்றைய தினம் தீர்மானிக்கும்.

இதையும் படிங்க: 'ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்' - பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.