சிம்லா (இமாச்சலப்பிரதேசம்): இமாச்சலப்பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள ஜூபிலண்ட் ஃபுட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கீழ், டோமினோஸ் பீட்சா நுகர்வோர் ஒருவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இந்த டெலிவெரியின்போது உணவு இருந்த கேரிபேக்கிற்கு ரூ.13.33 என விலை நிர்ணயிக்கப்பட்டு நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இமாச்சலப்பிரதேச நுகர்வோர் ஆணையத்திடம் சம்பந்தப்பட்ட நுகர்வோர் பில்லுடன் புகார் அளித்துள்ளார். இதனை சிம்லா மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் டாக்டர்.பல்தேவ் சிங், உறுப்பினர்கள் யோகிதா தத்தா மற்றும் ஜக்தேவ் சிங் ரைத்திகா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
விசாரணையின் முடிவில், டோமினோஸ் பீட்சா நிறுவனத்துக்கு ரூ.5,000 அபராதத்தொகை, வழக்குச்செலவு ரூ.3,000 மற்றும் கேரிபேக் விலை ரூ.13.33 என மொத்தம் ரூ.8,013.33 ரூபாயை அபராதமாக விதித்துள்ளது.
ஏனென்றால் நுகர்பொருள் விற்பனைச்சட்டம் 1935 பிரிவு 36ன் படி, ஒரு நிறுவனம் பொருட்கள் அல்லது உணவுப் பொருட்களை டெலிவரி செய்யும்போது கேரிபேக்கை இலவசமாக வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அசைவ பீட்சா வழங்கியதற்காக ரூ.9 லட்சம் அபராதம்!