முஸ்லிம் பெண்கள் தங்கள் கணவரால் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முத்தலாக் முறை சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பு மற்றும் திருமண உரிமைகள் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, சட்டவிரோதமாக முத்தலாக் சொல்லும் கணவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மன்சூர் அலி, தனது மனைவியிடம் முத்தலாக் சொல்லி பிரிந்துள்ளார். இவர்களுக்கு திருமணம் நடந்து 14 ஆண்டுகள் ஆகுகிறது. 13 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர்.
கிடைத்த தகவலின்படி, திருமணத்தை மீறிய உறவை கணவர் வைத்திருந்ததாக மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வாக்குவாதத்தில் இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது. மன்சூர் அலியிடம் சண்டை போட்டுவிட்டு தாயார் வீட்டிற்கு அவர் மனைவி வந்துள்ளார். உடனடியாக, மனைவியின் தாயார் வீட்டிற்குச் சென்ற கணவர், அவரிடம் முத்தலாக் சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக கோட்வாலி காவல் நிலையத்தில் அவரின் மனைவி புகாரளித்துள்ளார். அதில், எனது முடிவைக் கேட்காமல் முத்தலாக் சொல்லிவிட்டு கணவர் சென்றுவிட்டார். அவரால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது எனக் குறிப்பிட்டிருந்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: உடலில் கிக் ஏற்றும் நறுமண எண்ணெய்கள்... பாலியல் மாயாஜாலங்களின் தொகுப்பு!