மத்திய கிழக்கு வங்கக்கடலில் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது 25 ஆம் தேதி காலை வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, வடமேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்தது.
வலுவடைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, புயலாக மாறியது. இதற்கு குலாப் புயல் என பெயரிடப்பட்டது. இப்புயல் நேற்று (செப்.26) இரவு கரையை கடந்தது. இதனால் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
மேலும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. கொட்டி தீர்த்த கனமழையால், இவ்விரு மாநிலங்களிலும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆந்திரா, தெலங்கான மாநிலங்களில் பெருமளவில் சேதம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: அடுக்குமாடி வீடு சரிந்து விழும் அதிர்ச்சி வீடியோ