டெல்லி: நாட்டில் வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. 14 மாநிலங்களில் 44 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில், வடமேற்கு மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு, இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மே 1ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என இம்மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், மே 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை, வடமேற்கு இமயமலைப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வடமேற்கு மாநிலங்களில் மே 3 மற்றும் 4ஆம் தேதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மளமளவென உயரும் சம்பளம்.. ஆளின்றி தவிக்கும் ஐ.டி. நிறுவனங்கள்.. சிக்கல் என்ன?