ETV Bharat / bharat

ஞானவாபி மசூதி வழக்கில் இன்று மீண்டும் விசாரணை - Gyanvapi Mosque case

வாரணாசி நீதிமன்றத்தில் ஞானவாபி மசூதி மீதான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

hearing-on-gyanvapi-mosque-case-to-resume-today-in-varanasi-court

author img

By

Published : Jul 4, 2022, 12:56 PM IST

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை தினமும் வழிபட அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு நடத்தவும், அதை வீடியோவாக பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பலத்த பாதுகாப்புடன் நடந்த கள ஆய்வில், மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மசூதி நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதுதொடர்பான விசாரணை மே 20ஆம் தேதி நடந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கை வாரணாசி நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.

அந்த வகையில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் மே 24ஆம் தேதி இந்த வழக்கின் முதல் விசாரணையை தொடங்கியது. இதையடுத்து மே 30ஆம் தேதி விசாரணைக்கு பின், ஜூலை 4ஆம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி இன்று (ஜூலை 4) விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: "தாஜ்மஹாலில் இந்து தெய்வங்களின் சிலைகள் கிடையாது" - இந்திய தொல்லியல் துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.