ETV Bharat / bharat

சந்திரபாபு நாயுடுவின் மேல்முறையீடு மனு; நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 3:46 PM IST

Chandrababu Naidu's appeal tomorrow in the Supreme Court: சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

hearing-on-chandrababus-petition-tomorrow-in-the-supreme-court
சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!

டெல்லி: சந்திரபாபு நாயுடு மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த ஆந்திர உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு, சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்தபோது திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடி வரை ஊழல் நடந்ததாகக் கூறப்பட்ட வழக்கில் ஆந்திர சிஜடி காவல் துறையினர் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

எனவே, திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ஊழல் நடைபெற்றதாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தெலுங்கு தேச கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி கே.ஸ்ரீனிவாசன் ரெட்டி, வழக்கு முதல் கட்ட விசாரணையில் இருப்பதால் ரத்து செய்ய முடியாது எனத் தெரிவித்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை இணைத்து பேச தனபாலுக்கு தடை!

மேலும், விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு அக்டோபர் 5ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு தரப்பில் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், இந்த மனுவைத் ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என சந்திரபாபு நாயுடு தரப்பில், அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்பு நேற்று (செப்.25) முறையீட்டினை முன் வைத்துள்ளார். மேலும், ஊழல் வழக்கில் முன்னாள் முதலமைச்சர் கைது செய்வதற்கு முன்பு ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டும் (Section 17A of the Prevention of Corruption Act) எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து தலைமை நீதிபதி, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்பான வழக்கை விசாரணை செய்யும் அமர்வு இன்று (செப்.26) மாலை அறிவிக்கப்படும் எனவும், வழக்கு நாளை (செப்.27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சந்திரபாபு நாயுடு கைது; அக்.5 வரை காவல் நீட்டிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.