ETV Bharat / bharat

ஏழை மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றும் பள்ளி - பெற்றோர் இல்லாத குழந்தைகள்

ஏழைக் குழந்தைகள், பெற்றோர் இல்லாத குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் சேவையை செய்து வரும், ஹீல் பள்ளியில் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

ஏழை குழந்தைகளை மேம்படுத்தும் பள்ளி
ஏழை குழந்தைகளை மேம்படுத்தும் பள்ளி
author img

By

Published : Mar 18, 2023, 8:56 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் காந்த ரெட்டி நகரில் அமைந்துள்ளது ஹீல் பள்ளி (Heal school). பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட தனியார் அறக்கட்டளை மூலம் 1992ம் ஆண்டு இப்பள்ளி தொடங்கப்பட்டது. ஏழை எளிய குழந்தைகள், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் இந்த பள்ளி செயல்பட்டு வருகிறது. கண் பார்வையற்ற, காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கான தரமான கல்வியுடன் உணவும் வழங்கப்படுகிறது.

மாணவர் சேர்க்கை: இந்த நிலையில் 2023-24ம் கல்வியாண்டுக்கான 1 மற்றும் 2ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் 3-5ம் வகுப்பு வரை குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தாய் தந்தையை இழந்த குழந்தைகள் 1 முதல் 8ம் வகுப்பு வரை எப்போது வேண்டுமானாலும் சேர்க்கப்படுவார்கள் என பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் தகவல்களை info@healparadise.org, healschool@healparadise.org என்ற இணைய முகவரியை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என பள்ளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

என்னென்ன வசதிகள்?: குடும்பத்தால் கவனிக்கப்படாத 18 வயதுக்கு உட்பட்டோர், தாய், தந்தையை இழந்தவர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள், மிகவும் பின்தங்கிய பொருளாதாரம் கொண்ட குழந்தைகளுக்கு, மாணவர் சேர்க்கையில் இப்பள்ளியில் முன்னுரிமை அளிக்கப்படும். குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கும் வகையில் இங்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

திறமை வாய்ந்த ஆசிரியர்கள், சர்வதேச தொலை தூர கல்வி சேவை இங்கு உள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஸ்மார்ட் அறைகள், 10,000 புத்தகங்கள் கொண்ட நூலகம், தூய்மையான குடிநீர், உணவு, மாணவ, மாணவிகள் தங்குவதற்கு பிரத்யேக விடுதிகள், சூரிய சக்தியால் இயங்கும் சமையலறைகள் உள்ளிட்டவை உள்ளன. மேலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.

விளையாட்டு, யோகா: கல்வி சாராத, திறமையை வளர்க்கும் பயிற்சியும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. சர்வதேச தரத்தில் 400 மீட்டர் ஓட்டத்துக்கான தளம், கைப்பந்து, கபடி, கூடைப்பந்து ஆகியவற்று பிரத்யேக ஆடுகளங்கள் உள்ளன. மாணவர்கள் யோகா பயிற்சி செய்ய தனி அறையும் உள்ளது. 3-டி பிரின்ட்டிங் குறித்தும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பாடல், நடனம், கட்டுரை எழுதுதல், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் தேசிய மற்றும் மாநில அளவில் பல பரிசுகளை வென்றுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ் மூதாட்டியின் காலைத் தொட்ட பிரதமர்.. வாஜ்பாய்க்குப் பின் மோடி.. சின்னப்பிள்ளைக்குப் பின் பாப்பம்மாள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.