ஒடிசா ஜாசுகுட பகுதியை சேர்ந்தவர் நிட சாத்ரா. இவர் காந்தி நகரில் தினசரி கூலி தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இந்நிலையில், தான் பண மோசடிக்கு ஆளனதாக பெல்ப்ஹர் காவல் நிலையத்தில் புகார் ஒன்ரை அளித்தார். அந்தப் புகாரில்’, ”தனக்கு, கடந்த ஜனவரி மாதம் 23ஆம் தேதி அன்று ஒரு அழைப்பு வந்தது. அதில், நான் ’’கௌன் பனெக ச்ரொபடி’’ என்ற லாட்டரி சீட்டில் ரூ. 35 லட்சம் வெற்றி பெற்றதாகவும், மற்றும் பிரபல சேனலில் தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்தப் பணத்தை பெறுவதற்காக உடனடியாக வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இதற்கு முன் பணமாக சில தொகையை கட்ட சொன்னார்கள். அவர்களின் வார்த்தைகளை நம்பி நானும் என்னுடைய குடும்பமும் முதலில் 18, 200 ரூபாய் செலுத்தினோம், இரண்டாவது முறையாக ரூ. 35, 000 மற்றும் ரூ. 40, 000 என்ற செலுத்தினோம். பணத்தை செலுத்திய பிறகு அவர்களிடமிருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. ஆனால், அவர்கள் எங்களுக்கு காசோலையை அனுப்பி வைத்ததாக கூறுகின்றனர். மேலும், அவர்கள் மீண்டும் போன் செய்து டிராவல் குறித்து பணம் கேட்டனர். என குறிப்பிட்டுள்ளனர். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பால் பாக்கெட்டுகளில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள்!