ETV Bharat / bharat

ஸ்பைஸ்ஜெட் Vs கலாநிதி மாறன் - அஜய் சிங்கிற்கு மீண்டும் பின்னடைவு! - கலாநிதி மாறன் வழக்கு

Kalanithi Maran Vs SpiceJet: கலாநிதி மாறன் மற்றும் கல் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு 380 கோடி ரூபாய் வட்டித் தொகையை வழங்க வேண்டும் என்ற நடுவர் மன்ற தீர்ப்பை உறுதி செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

SPICEJET
டெல்லி உயர்நீதிமன்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 7:30 PM IST

டெல்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு கலாநிதி மாறன் தன்னிடம் இருந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்தார். ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 58.46 சதவீதப் பங்குகளை அந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர் அஜய் சிங்கிடம் விற்பனை செய்தார். அப்போது, இருதரப்பினரிடையே போடப்பட்ட ஒப்பந்தப்படி, அந்நிறுவனத்திற்காக தான் செய்த பல்வேறு செலவுகளுக்காக வட்டியும், அசலும் சேர்த்து 679 கோடி ரூபாயை அஜய் சிங் வழங்க வேண்டுமெனக் கோரி, கலாநிதி மாறன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஓராண்டுக்குள் ஐந்து தவணையாக பணத்தை வழங்க உத்தரவிட்டார். இதனை எதிர்த்து, டெல்லி உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.

இதையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அஜய் சிங் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு கடந்த 2017ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, வேறு வழியில்லாமல் அசல் 579 கோடி ரூபாயை அஜய் சிங் கலாநிதி மாறனுக்கு வழங்கினார். ஆனால், வட்டியை வழங்கவில்லை.

இதையடுத்து, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய நடுவர் மன்றத்திற்கு விவகாரம் சென்றது. அங்கும் கலாநிதி மாறனுக்கு ஆதரவாகவே தீர்ப்பு அளிக்கப்பட்டது. கலாநிதி மாறன் மற்றும் கல் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 380 கோடி ரூபாய் வட்டித் தொகையை வழங்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. நடுவர் மன்றத்தின் இந்த தீர்ப்பை கடந்த ஜூலை 31ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதியும் உறுதி செய்தார்.

இதை எதிர்த்து அஜய் சிங் சார்பில் மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நடுவர் மன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 24) விசாரணைக்கு வந்தபோது, நடுவர் மன்றத் தீர்ப்புக்கும், அதை உறுதி செய்த தனி நீதிபதி உத்தரவுக்கும் தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க: பாலியல் வழக்கில் அந்தமான் மாஜி தலைமைச் செயலாளருக்கு வழங்கிய ஜாமீனுக்கு தடையில்லை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.