ETV Bharat / bharat

வெறுப்பு, வன்முறை நாட்டை பலவீனப்படுத்தும்- ராகுல் காந்தி! - வெறுப்பு

வெறுப்பும், வன்முறையும் நாட்டை பலவீனப்படுத்தும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Apr 11, 2022, 7:38 PM IST

புது டெல்லி: வெறுப்பும், வன்முறையும் நாட்டை பிளவுப்படுத்த வந்துள்ளன, அனைத்து குடிமக்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு இந்தியாவை பாதுகாக்க வேண்டும் எனத் திங்கள்கிழமை (ஏப்.11) ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

நாட்டில் உள்ள சில மாநிலங்களில் ஸ்ரீ ராம நவமி ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்துள்ளது. நாட்டின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் (ஜேஎன்யூ) அசைவம் சாப்பிடக் கூடாது என வன்முறை வெடித்துள்ளது.

  • Hate, violence and exclusion are weakening our beloved country.

    The path to progress is paved with the bricks of brotherhood, peace and harmony.

    Let’s stand together to secure a just, inclusive India. 🇮🇳

    — Rahul Gandhi (@RahulGandhi) April 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில் ராகுல் காந்தி இக்கருத்தை முன்வைத்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கூறுகையில், “வெறுப்பு, வன்முறை மற்றும் ஒதுக்கிவைத்தல் ஆகியவை நமது அன்புக்குரிய நாட்டை பலவீனப்படுத்துகின்றன.

சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் செங்கற்களால் முன்னேற்றத்திற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவைப் பாதுகாப்பதற்கு ஒன்றாக நிற்போம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில் மத நிகழ்ச்சிகளை வெறுப்பை உமிழ பாஜக பயன்படுத்துகிறது என எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர், “ஒரு காலத்தில், இந்தியாவில் பண்டிகைகளின் போது, மக்கள் அமைதி செழிப்பையும் வளத்தையும் விரும்புவார்கள்.

இப்போது பாஜக ஆட்சியில் பண்டிகைகள் வெறுப்பு மற்றும் வன்முறை நிகழ்வுகளாக மாறிவிட்டன. அண்ணல் காந்தியின் படுகொலையை தொடர்ந்து, அவரது மதிப்புகள் படுகொலை செய்யப்படுகின்றன.

இப்போது இரண்டு வரிகள் மட்டுமே பொருத்தமானவை. ஹே ராம்” எனத் தெரிவித்துள்ளார். மற்றொரு காங்கிரஸ் தலைவரான மாணிக்கம் தாகூரும் ஜேஎன்யூ வன்முறை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஒழுங்கீனத்தை சகித்துக் கொள்ள மாட்டோம்- ராகுல் காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.