ஹரியானா மாநில துணை முதலமைச்சரும், மாநில தொழிலாளர் துறை அமைச்சருமான துஷ்யந்த் சவுத்தலா ஹரியானா மக்களுக்கு தனியார் வேலைவாய்ப்பில் 75 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
எவ்வாறாயினும், இது அரசியலமைப்பின் பிரிவு 14 (சட்டத்தின் முன் சமத்துவம்) மற்றும் 19 (இந்தியாவில் எங்கும் எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ளும் உரிமை), ஆகியவற்றை மீறும் வண்ணம் இந்த மசோதா அமைந்துள்ளது. ஹரியானா மக்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் இந்த மசோதா சட்டம் ஆக வேண்டும் என்றால் அதற்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
குறைந்த ஊதியம் பெறும் வேலைகளுக்காக போட்டியிடும் ஏராளமான புலம்பெயர்ந்தோர், உள்ளூர் உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதி, சேரிகளின் பெருக்கம் ஆகியவற்றின் தாக்கத்தை சுட்டிக்காட்டிய மாநில அரசு, "சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக உள்ளூர் மக்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள இந்த மசோதா வழிவகுக்கும்" என்று தெரிவித்துள்ளது.
இந்த மசோதாவின் விதிகளின் கீழ் அனைத்து ஊழியர்களும் மாதத்திற்கு ரூ.50 ஆயிரத்திற்கும் குறைவான மொத்த ஊதியம் பெறும் நபர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
மசோதா சட்டமாகிய மூன்று மாதங்களுக்குள் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் சமந்தப்பட்ட நிறுவனகளுக்கு ரூ. 25,000 முதல் 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.