சண்டிகர்: ஹரியானா மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் மீது பெண் பயிற்சியாளர் அளித்துள்ள பாலியல் புகாரை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்துள்ளார். மாநில விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் சந்தீப் சிங்(36). ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் ஹாக்கி வீரரான இவர், இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
இவர் மீது தேசிய தடகள வீராங்கனையும், தடகள பயிற்சியாளருமான பெண்மணி ஒருவர் சந்தீப் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். பணி நிமித்தமாக அமைச்சர் சந்தீப் சிங்கை சந்திக்க, சண்டிகரில் உள்ள அவரது முகாம் அலுவலகத்திற்கு சென்றபோது, அவர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், அரசியல் நோக்கத்திற்காகவே இந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்தீப் சிங் விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், அந்த பெண் பயிற்சியாளர் சண்டிகரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்துவருகிறது. இந்த நிலையில் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவியில் இருந்து சந்தீப் சிங் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையும் படிங்க: ஈஷா யோகாவில் பயிற்சி முடிந்து மாயமான பெண் கிணற்றில் சடலமாக மிதப்பு?