யமுனா நகர்: இதேபோல் ஜனவரி 12 வரை பள்ளி, கல்லூரிகளை மூட முன்னதாக ஹரியானா அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது, வரும் 26ஆம் தேதிவரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் என்ற அறிவிப்பை அம்மாநில கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஹரியானா கல்வித் துறை அமைச்சர் சி.ஹெச். கன்வர் பால் அவரது ட்விட்டர் பக்கத்தில், "அதிகரித்துவரும் கரோனா பெருந்தொற்றுப் பரவல், பாதிப்பைக் கருத்தில்கொண்டு, மாணவர்களைப் பாதுகாக்கும் வண்ணம் ஜனவரி 26 வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படும்.
மேலும், வருகின்ற தேர்வுகளுக்காகத் தயாராக அதில் கவனம் செலுத்தும்வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உரிய நடவடிக்கைகளுடன் காணொலி வாயிலான கற்பித்தல் (nline teaching) தொடர்ந்து நடைபெறும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹரியானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய கரோனா பாதிப்பு நான்காயிரத்து 361 ஆக உள்ளது. அதன்படி, அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 321 ஆகும். அதேசமயம் 805 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்: நரேந்திர மோடி திறந்துவைப்பு