ETV Bharat / bharat

கபில்சிபிலை தொடர்ந்து காங்கிரஸை விட்டு விலகிய ஹர்திக் பட்டேல்... - காங்கிரஸின் பலம் குறைகிறதா

காங்கிரஸ் கட்சியில் குஜராத் செயல் தலைவரான ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதையடுத்து பாஜகவில் இணைய உள்ளதாக தெரிவித்தார்.

கபில் சிபிலை தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யாவும் காங்கிரஸை விட்டு விலகினார்- காங்கிரஸின்  பலம் குறைகிறதா?

author img

By

Published : May 31, 2022, 12:57 PM IST

Updated : May 31, 2022, 1:06 PM IST

காந்திநகர்(குஜராத்): குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல் காங்கிரஸில் இருந்து விலகுவதாக இன்று (மே 31) அறிவித்துள்ளார். மேலும் வரும் ஜூன் 3 அன்று பாஜகவில் இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக காங்கிரஸின் மூத்த தலைவர் கபில்சிபல் காங்கிரஸில் இருந்து விலகி அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்து தற்போது ராஜ்யசபா தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸின் மற்றொரு முக்கிய தலைவர் இவ்வாறு விலகியிருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து படேல் கூறுகையில், ‘ காங்கிரஸ் கட்சியினர் இந்து மதத்தின் மீது, ராமர் மீதும் இழிவான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை கூறிவருவதால் அந்த கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அயோத்தியா ராமர் கோவிலின் சுவர் மீது நாய்கள் சிறுநீர் கழிப்பதாக கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் காங்கிரஸ் தலைமையிடம் இந்து மதத்தின் மீதும், ராமர் மீதும் என்ன பகை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் விலகியது குறித்து காங்கிரஸின் தலைமை இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதையும் படிங்க:எனக்கு தகுதி இல்லையா சோனியா ஜி... புலம்பும் நக்மா!

Last Updated : May 31, 2022, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.