2022ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில சட்டப்பேரவை இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. மேலும் முடக்கப்பட்ட அந்த இணையதளத்தில் தகாத பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள உத்தரப்பிரதேச ஐ.டி. பிரிவு காவல்துறை குற்றவாளிகளை தேடி வருகிறது.
விசாரணை தீவிரமாக நடைபெறுவதாகவும், குற்றவாளி விரைவில் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் ஏ.டி.ஜி. ராம் குமார் தெரிவித்துள்ளார்.
அன்மையில், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை முடக்கி, நூற்றுக் கணக்கான போலி வாக்காள் அடையாள அட்டையை தயாரித்த 24 வயது இளைஞரை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’பொருளாதார முன்னோடியாக பிரிக்ஸ் அமைப்பு உருவெடுக்கும்’ - பிரதமர் மோடி