லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஞானவாபி மசூதியின் வெளிப்புறச்சுவரில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை தினமும் வழிபட அனுமதிகோரிய விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுப்படி மசூதி வளாகத்தில் கள ஆய்வு நடத்தப்பட்டது. இந்த கள ஆய்வில், மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வழக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி என்ற சாமியார் தனது சீடர்களுடன் சென்று, மசூதி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடப் போவதாக கடந்த 2ஆம் தேதி அறிவித்திருந்தார்.
அதன்படி, சாமியார் அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி இன்று (ஜூன் 4) ஞானவாபி மசூதி வளாகத்திற்குள் நுழைய முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சாமியார் மசூதி வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்காவிட்டால், சங்கராச்சாரியாரிடம் முறையிடுவேன் என்றும் முழக்கமிட்டார். தர்ணாவைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கில் நாளை தீர்ப்பு!