வாரணாசி: ஞானவாபி மசூதி வளாகத்தை ஆய்வு செய்தபோது கிடைத்த பொருளை ஆய்வு செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக்கோரி இந்து வழிபாட்டாளர்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், ஞானவாபி மசூதியின் 'வாஸு கானா'வில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கம் என்று கூறப்படும் பொருளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த, அதை கார்பன் டேட்டிங் மூலம் ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக இந்து வழிபாட்டாளர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரு தரப்பினர் விருப்பம் தெரிவிக்காதபோது திருமணத்தை ரத்து செய்ய அதிகாரம் கிடையாது - உச்ச நீதிமன்றம்