குவாலியர் (மத்தியபிரதேசம்): குவாலியர் நகரில் பட்டப்பகலில் ரூ.1.20 கோடி கொள்ளையடிக்கப்பட்டதை 6 மணி நேரத்தில் போலீசார் கண்டறிந்துள்ளனர். நிறுவன ஊழியர்கள் தங்கள் சக ஊழியர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு கொள்ளையடித்ததை போலீசார் கண்டறிந்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் 3 பேரை கைது செய்த போலீசார், கொள்ளையடிக்கைப்பட்ட பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்ட ஊழியர்களான பிரமோத் குர்ஜார் மற்றும் சுனில் ஷர்மா இருவரும் ஒவ்வொரு வாரமும் நிறுவனத்திலிருந்து ஒரு பெரிய தொகையுடன் வங்கிக்குச் செல்வார்கள்.
அதனால் அந்த பணத்தை கொள்ளையடிக்க எண்ணியவர்கள், மேலும் இரண்டு பேருடன் சேர்ந்து, நகரின் மிகப்பெரிய கொள்ளையைத் திட்டமிட்டு நடத்தினர். ஆனால் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது கொள்ளையடிக்கும்போது எதிர்ப்பு தெரிவிக்காததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இது குறித்து அவர்கள் இருவரிடமும் மேலும் விசாரித்த போது உண்மையை ஒப்புக்கொண்டனர். மெஹ்தாப் சிங் குர்ஜார் ஒரு டிரான்ஸ்போர்ட்டர் என்பதையும், அவருக்கு டிடி நகரில் ஹரேந்திர டிரேடிங் என்ற நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது என்பதையும், பால் கிஷன் சாஹூவும் இந்த நிறுவனத்தில் பங்குதாரர், பிரமோத் குர்ஜார் மற்றும் சுனில் ஷர்மா ஆகியோர் இங்கு பணியாளர்கள் என்பதையும் தெரிவித்தனர்.
நேற்று காலை, 1.20 கோடி பணம் அடங்கிய அட்டைப்பெட்டியை டிக்கியில் வைத்துக்கொண்டு, இந்தர்கஞ்ச் பேங்க் ஆப் பரோடாவுக்கு, கம்பெனி காரில் ஊழியர்கள் புறப்பட்டனர். காரின் இருக்கையில் 30 லட்சம் ரூபாய் பையில் வைத்திருந்தனர். அப்போது கொள்ளை சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: செஞ்சிலுவைச் சங்க நிர்வாகிகளின் ரூ.3.37 கோடி சொத்துகள் முடக்கம்!