ETV Bharat / bharat

மே.வங்க ஆளுநர் முக்கிய கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளார்- மம்தா பானர்ஜி - Mamata

பாஜக தலைமையிலான மத்திய அரசு, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளைப் பயன்படுத்துகிறது என்றும், முக்கிய கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.

மேற்கு வங்கம்: ஆளுநரை குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி!

author img

By

Published : Apr 5, 2022, 2:46 PM IST

கொல்கத்தா: மாநில அரசின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் தொடர்பான கோப்புகளை ஆளுநர் ஜக்தீப் தன்கர் அலட்சியப்படுத்தியதாகவும், கிடப்பில் போட்டுவிட்டதாகவும் மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மாநில தலைமை செயலகத்தில் நேற்று (ஏப். 04) குற்றஞ்சாட்டினார்.

லோக்அயுக்தா உறுப்பினர், மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் மற்றும் தகவல் அறியும் உரிமை ஆணையர்களின் நியமனங்கள் தொடர்பான ஆவணங்கள் ஆறு மாதங்களாக தன்கரின் ஒப்புதலுக்காகக் கிடப்பில் இருப்பதாகவும் பானர்ஜி கூறினார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆளுநர் தன்கர் கோப்புகளை முழுமையாக முடிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். ஒருநாள் முன்பு கூட, அவர் பட்ஜெட்டை முடிக்க மறுத்துவிட்டார். ஆளுநருக்கு இது அவரது கடமை என்பதை நினைவூட்ட நான் அவரை அழைக்க வேண்டியிருந்தது.

எல்லா இடங்களிலும் குறிப்பாக பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் இவ்வாறு நடக்கிறது. முக்கியமான காலி பணியிடங்களை நிரப்புமாறு உச்ச நீதிமன்றம் சில சமயங்களில் மாநில அரசை அறிவுறுத்துகிறது. ஆனால், ஆளுநர் கோப்புகளை அழிக்காததால், நியமனங்கள் அப்படியே கிடப்பில் கிடக்கின்றன" என்று கூறினார்.

இதுகுறித்து ஆளுநர் தன்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியபோது, 'முதலமைச்சரின் கூற்றுகள் தவறானவை. "லோக்அயுக்தா அல்லது எஸ்ஹெச்ஆர்சி தலைவர் அல்லது தகவல் ஆணையர்களின் நியமனக் கோப்புகள் அரசுப் பரிசீலனைக்கு நிலுவையில் உள்ளன என்ற முதலமைச்சரின் கூற்று தவறானது.

பிப்ரவரி 17 அன்று பெறப்பட்ட இந்தக் கோப்புகள் ஐந்து நாள்களில் திருப்பி அனுப்பப்பட்டு, மாநிலத்தின் பதிலுக்காக இப்போது ஒன்றரை மாதங்கள் காத்திருக்கின்றன" என்று அவர் ட்வீட் செய்துள்ளார். முன்னாள் காவல் துறை இயக்குநர் நாயகம் வீரேந்திரா மற்றும் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் நவீன் பிரகாஷ் ஆகியோரை தகவல் ஆணையர்களாக நியமிப்பதற்கான மேற்கு வங்க அரசின் பரிந்துரை தவறானது என்று ஆளுநர் தன்கர் முன்பு கூறியிருந்தார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சிபிஐ மற்றும் இடி போன்ற அமைப்புகளைப் பயன்படுத்துகிறது என்றும் பானர்ஜி குற்றஞ்சாட்டினார். நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க, பாஜக அல்லாத அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிற தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக மம்தா பானர்ஜி கூறினார்.

இதையும் படிங்க: 'அனுமன் பிறந்த இடம் கர்நாடகாவின், 'கிஷ்கிந்தா'- தேஜஸ்வி சூர்யா'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.