ETV Bharat / bharat

Gut Health: இந்த உணவு வகைகளை தவறியும் சாப்பிடாதீங்க - குடல் ஆரோக்கியம் அவ்வளவுதான்! - வறுத்த உணவுகள்

நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க விரும்பினால், உங்கள் குடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

Gut Health: Risk of damage to stomach health with these ingredients..!
Gut Health: இந்த உணவு வகைகளை தவறியும் சாப்பிடாதீங்க - குடல் ஆரோக்கியம் அவ்வளவுதான்!
author img

By

Published : Jun 27, 2023, 1:17 PM IST

வயிறு, இது உங்கள் உடலின் உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது பல முக்கிய உடல் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது, எனவே அதை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது. உடல் எடை, மனநிலை, அறிவாற்றல் ஆரோக்கியம், அழற்சி மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாடு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த உதவுவதால், குடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

மனிதன் உடல் ஆரோக்கியமாக இருந்தால், அவன், இந்த உலகில் உள்ள அனைத்து செல்வங்களையும் பெற்றவன் ஆகின்றான். வயிற்றின் ஆரோக்கியம் நம் உடலில் மிகவும் முக்கியமானது. வயிறு 'இரண்டாவது மூளை' என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், நம் மூளையில் ஒரு எண்ணம் உதித்தால், முதலில் வினைபுரிவது வயிறுதான். அதனால்தான் மன அழுத்தத்தில் இருக்கும்போது வயிறு அசௌகரியமாக இருப்பதாக உணர்கின்றோம், நாம். ஒருவரிடம் கோபப்படும் பட்சத்தில், நமது உடலில் அமில - காரத்தன்மை அதிகரிக்கும். எனவே, வயிற்றின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் நாம் உட்கொள்ளும் சில உணவுப் பொருட்களால் வயிற்றின் ஆரோக்கியம் கெடுவதாக கூறப்படுகிறது.

எந்தெந்த வகை உணவுப் பொருட்களை உட்கொள்வதால், குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது என்பதை விரிவாக விவரிக்கிறது இந்தக் கட்டுரை. கீழ்க்கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதைக் குறைத்து, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வோமாக...

சர்க்கரைப் பொருட்கள்: நமது உடலில் செரிமான நிகழ்விற்கு அடிப்படை ஆதாரமாக உள்ள குடலில், நன்மை தரும் மற்றும் தீமை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மிக அதிக அளவில் உள்ளன. நாம் உட்கொண்ட உணவை செரிமானம் செய்வதற்கு, நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள், முக்கியப் பங்கு வகிக்கின்றன. தீமை விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வாயுப்பிடிப்பு, அல்சர் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு காரணமாக அமைகின்றன.

சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகள், நமது குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதோடு மட்டுமல்லாது, தீமை விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக, மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இதன்காரணமாக, பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்படுகின்றன. சர்க்கரை மற்றும் சர்க்கரைச் சத்து அதிகம் கொண்ட உணவு வகைகளை உட்கொள்வதைத் தவிர்த்து, குடல் ஆரோக்கியம் பேணுவோம்.

செயற்கை சர்க்கரை: சர்க்கரை மற்றும் சர்க்கரை சத்து அதிகம் கொண்ட உணவுப்பொருட்களால், உடல்நலத்திற்கு தீங்கு என்பதை அறிந்தவர்கள், அதற்கு மாற்றாக, வேதிப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட செயற்கை முறையிலான சர்க்கரையை உட்கொள்ள துவங்கி உள்ளனர். இந்த செயற்கை சர்க்கரை கொண்ட உணவு வகைகள், நேரடியாக, நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கவல்லது ஆகும். செயற்கை சர்க்கரை, வயிறு ஆரோக்கிய குறைபாட்டிற்கு காரணமாக அமைவதோடு மட்டுமல்லாது, குடல் பகுதியில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகின்றது. எனவே, செயற்கை சர்க்கரை உள்ள உணவு வகைகளை தவிர்த்து, உடல் ஆரோக்கியத்தைக் காப்போம்.

வறுத்த உணவு வகைகள்: இந்த நவநாகரீக உலகத்தில், எண்ணெயில் வறுத்த உணவு வகைகளே, எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளன. இந்த வகை உணவுகள், செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன. இதன்காரணமாக, வயிறு ஆரோக்கியம் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. வறுத்த உணவுகள் உட்கொள்வதை, போதுமான அளவிற்கு தவிர்ப்பது, உடல்நலத்திற்கு நல்லது.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்: பேக்கிங் செய்யப்பட்டு சந்தையில் விற்பனையில் சக்கைப்போடு போடும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளே, குழந்தைகள் மட்டுமல்லாது, இளைய தலைமுறையினரின் விருப்பமான உணவுகளாக உள்ளன. பேக்கிங் செய்யப்பட்ட உணவு வகைகள் நீண்ட காலம் கெடாமல் இருக்கும் பொருட்டு, அந்த உணவுப் பொருட்களில், அதிக அளவில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு உள்ளிட்டவைகள் கலந்து தயாரிக்கப்படுகின்றன.

இத்தகைய உணவு வகைகளை, அதிகமாக உட்கொள்ள நேரும்போது, அவைகள் நம் உடலின் குடல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது, செரிமானக் குறைவு ஏற்பட முக்கிய காரணியாக அமைகின்றன. இத்தகைய உணவு வகைகளை, போதுமான அளவு தவிர்த்து, உடல்நலம் காப்போமாக....

இதையும் படிங்க: மழைக்காலத்துக்கு ஏற்ற உணவுகள் எவை? - ஊட்டச்சத்து நிபுணர்கள் அட்வைஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.