டெல்லி: சீக்கிய குருவின் போதனைகளை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பின்பற்றுகின்றனர். மேலும் அவை இரக்கம் மற்றும் பணிவின் பாதையை பின்பற்ற மக்களை எப்போதும் ஊக்குவிக்கின்றன என கூறிய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மக்கள் அனைவருக்கும் குருநானக் ஜெயந்தி விழாவிற்கான வாழ்த்தை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "குரு நானக் தேவ் தனது உன்னத வாழ்க்கையின் மூலம் உண்மை, இரக்கம் மற்றும் நீதியின் சின்னமாக இருந்து வருகிறார். இந்தியாவின் ஆன்மீக தலைவர்கள், போதகர்கள், சீர்திருத்தவாதிகள் மற்றும் புனிதர்கள் மத்தியில் அவருக்கு ஒரு தனித்துவமான இடம் உண்டு. இரக்கம், மனத்தாழ்மை ஆகியவற்றின் வழியைப் பின்பற்றவும், சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்கும் மரியாதை காட்டவும் எப்போதும் நம்மை அவை ஊக்குவிக்கும்.
குரு நானக் ஜெயந்தி எப்போதும் குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றிணைந்து கொண்டாட கிடைக்கும் ஒரு சந்தர்ப்பம். ஆனால் இந்த ஆண்டு, கரோனா வைரஸ் தொற்று காரணமாக சுகாதாரத்தை கடைப்பிடித்து உடல்நலம் மற்றும் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி விழாவைக் கொண்டாடுமாறு எனது சக குடிமக்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில், நாட்டில் நல்லிணக்கத்துக்காகவும் அமைதிக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க: பஞ்சாபியர்களை கௌரவித்த நியூயார்க்!