ETV Bharat / bharat

கேஜிஎஃப் படம் பார்த்த இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு! - யாஷ்

கேஜிஎஃப் பாகம் 2, வெளியான திரையரங்கம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் இளைஞர் ஒருவர் படுகாயமுற்றார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Gunfire while KGF
Gunfire while KGF
author img

By

Published : Apr 20, 2022, 12:20 PM IST

ஹாவேரி: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சிக்காவி நகரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் திரையிடப்பட்டுள்ளது.

இந்தத் தியேட்டரில் செவ்வாய்க்கிழமை (ஏப்.19) இளைஞர் ஒருவர் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் படத்தை பார்த்துகொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்தவர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்.

Gunfire while KGF Chapter-2 movie show, one Injured
கேஜிஎஃப் படம் பார்த்த இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு!

இந்தத் தாக்குதலில் 27 வயதான வசந்தகுமார ஷிவபுரா படுகாயம் அடைந்தார். அவரது வயிறு மற்றும் கால் பகுதியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. தொடர்ந்து அவர் தாலுகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது மேல் சிகிச்சைக்காக கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து வெளியான தகவலில், “குண்டடிப்பட்டவரின் கால் அருகில் இருந்தவர் மீது பட்டதால் ஏற்பட்ட சண்டையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது” தெரியவந்துள்ளது.

படுகாயம் அடைந்த இளைஞர் வசந்தகுமார ஷிவபுரா

இந்தச் சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். நடிகர் யாஷ் நடிப்பில் நீல் சோப்ரா இயக்கத்தில் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் ஏப்.14ஆம் தேதி வெளியாகி இந்திய அளவில் சாதனை படைத்துவருகிறது.

இதையும் படிங்க: வெளியானது இந்தி கைதி ரீமேக் டைட்டில்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.