புதுச்சேரி: ரோந்து பணிக்கு செல்லும் காவலர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் என்று அம்மாநில எஸ்.எஸ்.பி. லோகேஷ்வரன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு இரவு நேர ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம், திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்த பூமிநாதன் (56) ரோந்துப் பணியின் போது, கொலை செய்யப்பட்டார். இதன்காரணமாக, தமிழ்நாட்டில் ரோந்து பணிக்கு செல்லும் காவலர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்லலாம் என்று உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியிலும் இதேபோல உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கு - மூவர் கைது