ETV Bharat / bharat

ரக்‌ஷாபந்தன் 2022 - சூரத்தில் தனித்துவமான "வைர ராக்கிகள்" விற்பனை! - ராஜஸ்தான் மாநிலத்தில் ராக்கி தயாரிக்கும் பணிகள்

ரக்‌ஷாபந்தனை முன்னிட்டு குஜராத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தனித்துவமான வைர ராக்கிகளை தயாரித்து விற்பனை செய்கிறார்.

Gujarati
Gujarati
author img

By

Published : Aug 2, 2022, 4:08 PM IST

குஜராத்: சகோதர - சகோதரிகளின் பாசத்தையும் பந்தத்தையும் எடுத்துரைக்கும் ரக்‌ஷாபந்தன் விழாவின்போது, சகோதரிகள் தங்களது சகோதரர்களுக்கு கைகளில் ராக்கி கட்டி, பூஜை செய்வது வழக்கம். இந்த ஆண்டு ரக்‌ஷாபந்தன் விழா வரும் 11ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ராக்கி தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் வித்தியாசமான ராக்கிகள் விற்பனைக்கு வரும். அந்த வகையில், குஜராத் மாநிலம் சூரத்தில் ரஜினிகாந்த் சச்சந்த் என்ற வியாபாரி, தனித்துவமான வைர ராக்கிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

வைர ராக்கிகள்
வைர ராக்கிகள்

தங்கம் மற்றும் வைரக்கற்களை கொண்டு இந்த ராக்கிகள் தயாரிக்கப்படுவதாகவும், இவை சுற்றுச்சூழலை பாதிக்காது என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். இந்த ராக்கிகள் மூன்றாயிரம் ரூபாய் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:ட்விட்டர் புரொபைல் - தேசிய கொடியை மாற்றினார் பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.