ETV Bharat / bharat

Modi surname case: ராகுலின் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! - Rahul Gandhi Modi surname case

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மோடி அவதூறு வழக்கில் இடைக்காலத் தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : May 2, 2023, 8:33 PM IST

அகமதாபாத் : பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் வழங்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிறைக்குச் செல்லும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம், கோலாரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டார். “நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்க முடியும்? எப்படி அனைத்து திருடர்களும் மோடி என்ற இணை பெயரோடு இருக்க முடியும்?” என ராகுல் காந்தி பேசினார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குஜராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்குத் தொடர்ந்தார். பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என சூரத் நீதிமன்றம் அறிவித்தது. மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள்காட்டி மக்களவைச் செயலகம் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் அவர் தங்கி இருந்த அரசு வீட்டைக் காலி செய்யுமாறு மக்களவைச் செயலகம் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியது. வீட்டைக் காலி செய்வதாக ஒப்புக்கொண்டு ராகுல் காந்தியும் பதில் கடிதம் எழுதினார்.

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட ராகுல் காந்தியின் மனுவைத் தள்ளுபடி செய்வதாக சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து செசன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பான விசாரணை நடைபெற்றது. ராகுல் காந்தியின் குற்றவியல் மறுசீரமைப்பு மனுவை எதிர்த்து கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க மனுதாரர் புர்னேஷ் மோடி தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஹேமந்த், செசன்ஸ் நீதிமன்றத்தில் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கின் விசாரணை கோடை விடுமுறை முடிந்ததும் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி கூறினார்.

இதையும் படிங்க : எடியூரப்பா மகன் முதல்முறையாக தேர்தலில் போட்டி - மகனுக்காக விட்டுக்கொடுத்த எடியூரப்பா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.