காந்திநகர்: இந்தியாவில் கடந்த வாரத்தில் 30 பேருக்கு மட்டுமே ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 200 பேருக்கு உறுதியாகி உள்ளது. அப்படி மொத்தம் 13 மாநிலங்களில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி, தெலங்கானாவில் ஒமைக்ரான் தொற்று அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லியில் தலா 54 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் 14 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக குஜராத் அரசு, மாநிலத்தின் எட்டு முக்கிய நகரங்களில் டிசம்பர் 31ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, அகமதாபாத், காந்திநகர், சூரத், ராஜ்கோட், வடோதரா, பாவ்நகர், ஜாம்நகர், ஜுனகர் ஆகிய நகரங்களில் நள்ளிரவு 1 மணி அதிகாலை 5 வரை இரவு ஊரடங்கு கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் 200ஐ எட்டிய ஒமைக்ரான்