ராஜ்கோட்: ராஜஸ்தான் மாநிலம், ராஜ்கோட் சோதனைச்சாவடியில் சந்தேகத்திற்கிடமான லாரி ஒன்றைப் போலீசார் சோதனை செய்தனர். அதில், கலப்பட பால் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து 4 ஆயிரம் லிட்டர் கலப்பட பாலையும், லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்கோட் காவல் துறை துணை ஆணையர் பிரவீன் குமார், "பறிமுதல் செய்யப்பட்ட பால், சல்பேட், பாஸ்பேட், கார்பனேட் எண்ணெய்கள் போன்ற ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கலப்பட பாலை பல மாதங்களாக விற்பனை செய்து வருகின்றனர்.
பால் தயாரிக்கப்பட்ட தொழிற்சாலை மற்றும் விநியோகம் செய்தவர்களை கண்டறிந்துள்ளோம். அடுத்தகட்டமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனைவியை மற்ற பெண்களுடன் ஒப்பிடுவது மன ரீதியான கொடுமை... கேரள உயர்நீதிமன்றம்