குஜராத்தில் கிராமத் தலைவர்களுடன் மெய்நிகர் சந்திப்பின்போது, அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி பேசியதாவது:
"கரோனாவைக் கட்டுப்படுத்த குழுக்களை அமைப்பதன் மூலமும், சந்தேகத்திற்கிடமான நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலமும் தங்கள் பகுதிகளை கரோனா தீநுண்மி இல்லாததாக மாற்றலாம். ‘கரோனா பாதிப்பின் எண்ணிக்கையை அதிகரிக்க விடமாட்டோம்’ என்று உறுதியளிப்போம்.
மேலும், கரோனா தீநுண்மியிலிருந்து விடுபடுவோம். குஜராத்தின் 14,000 கிராம பஞ்சாயத்துகளில் தலா 10 பேர் கொண்ட குழுக்களை அமைத்து 15 நாள்களில் கிராமங்களை கரோனா தீநுண்மி இல்லாததாக மாற்ற வேண்டும்" என்றார்.
மக்கள் விரைவாக தடுப்பூசி போடுவதை உறுதிசெய்யுமாறு முதலமைச்சர், கிராமத் தலைவர்களிடம் வேண்டுகோள்வைத்தார்.
'இருமல், காய்ச்சல் அல்லது அதனுடன் தொடர்புடைய அறிகுறிகளால் பாதிக்கப்படுபவர்களை கிராமங்களுக்குள் அமைக்கப்பட்ட தனி மையங்களுக்கு அழைத்துச் செல்லுமாறும் கிராமத் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.