ETV Bharat / bharat

43ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மாநில நிதியமைச்சராக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முதல் எண்ட்ரி

author img

By

Published : May 28, 2021, 3:10 PM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 43ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், மாநில நிதியமைச்சர்கள், மூத்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

கரோனா இரண்டாம் அலைக்கு மத்தியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருந்துகள், உபகரணங்கள், தடுப்பூசிகள் ஆகியவற்றின் வரியைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருகிறது.

முன்னதாக கரோனா தொற்று சிகிச்சைக்குப் பயன்படும் மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசை வலியுறுத்தினார். தொற்று நோய் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் இதுபோன்று பொருள்களுக்கு வரி வசூலிப்பது கொடூரமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு வரியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திவந்த நிலையில், இந்த கூட்டம் இன்று நடைபெற்றது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், கரோனா இரண்டாம் அலையின் பரவல் காரணமாக எட்டு மாதங்களுக்குப் பிறகு நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பால் பல மாநிலங்கள் இழப்பைச் சந்தித்துள்ள நிலையில் அவற்றுக்கு நிதி அளிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பில் நிதி அமைச்சராக முதன்முறை பொறுப்பேற்ற பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பயன்படுத்தப்பட்ட மாஸ்க், பிபிஇ கிட்டுகள் கழுவி மீண்டும் விற்பனை: அதிர்ச்சி வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.