ETV Bharat / bharat

ஆண்டிப்பட்டியின் அழகில் மயங்கிய பியூஷ் கோயல்!

மயக்கும் அழகுடன் உசிலம்பட்டி - ஆண்டிப்பட்டி ரயில்பாதை அமைந்திருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ட்வீட் செய்துள்ளார்.

Goyal
Goyal
author img

By

Published : Dec 20, 2020, 4:43 PM IST

மேற்குத் தொடர்ச்சி மலை அழகின் பின்னணியுடன் அமைந்த உசிலம்பட்டி-ஆண்டிப்பட்டி ரயில்வே பாதையின் புகைப்படங்களை ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மயக்கும் அழகுடன் இந்த ரயில் பாதை அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுரையிலிருந்து தேனி மாவட்டம், போடி வரையில் மீட்டர் கேஜ் பாதையாக இருந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற 2009ஆம் ஆண்டு அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக 2019ஆம் ஆண்டு மதுரையில் உசிலம்பட்டி வரையில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

பியூஷ் கோயல் ட்விட்டர் பதிவு
பியூஷ் கோயல் ட்விட்டர் பதிவு

தொடர்ந்து, உசிலம்பட்டியில் இருந்து தேனி வரையிலான 21 கிலோமீட்டர் தூர அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. விரைவில் மதுரை-தேனி வரையிலான பயணிகள் ரயில்சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : மதுரை-போடி அகல ரயில் பாதையில் மீண்டும் சோதனை ஓட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.