டெல்லி: தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில், செயில் நிறுவனத்தின் சேலம் இரும்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று உலகளாவிய முதலீடுகளுக்காக அரசு அழைப்பு விடுத்தது. இதன்பேரில் பல உலகளாவிய முதலீடுகள் பெறப்பட்டு, அவற்றுள் சில தணிக்கை செய்யப்பட்டன.
ஆனால், அவ்வாறு தணிக்கை செய்யப்பட்ட ஏலதாரர்கள், அதற்கு அடுத்ததான செயல்முறையில் ஆர்வம் காட்டவில்லை என முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மைத்துறை தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. இதனால், அதற்கு மாற்றான செயல்முறைக்கு மத்திய அரசு ஒப்புதழ் வழங்குவதற்காக, தற்போதைய ஏலதாரர்களை நீக்கியுள்ளது.
முன்னதாக, 2018ஆம் ஆண்டு செயில் நிறுவனம் துர்காபூரில் உள்ள அல்லாய்ஸ் இரும்பு ஆலை, தமிழ்நாட்டின் சேலத்தில் உள்ள இரும்பு ஆலை மற்றும் கர்நாடகாவின் பத்ரவாடியில் உள்ள விஸ்வேஸ்வராயா இரும்பு மற்றும் எஃகு ஆலை ஆகிய மூன்று யூனிட்களை அமைக்க பொருளாதார விவகாரங்கள் கேபினட் கமிட்டி அனுமதி வழங்கியது.
அதேநேரம், 2019ஆம் ஆண்டு துர்காபூரில் உள்ள அல்லாய்ஸ் இரும்பு ஆலை விற்பனையை நிறுத்திய மத்திய அரசு, 2022ஆம் ஆண்டு ஏலதாரர்களின் ஆர்வமின்மை காரணமாக கர்நாடகாவின் பத்ரவாடியில் உள்ள விஸ்வேஸ்வராயா இரும்பு மற்றும் எஃகு ஆலையின் மூலோபய விற்பனையையும் நிறுத்தியது. இந்த நிலையில்தான், சேலம் இரும்பு ஆலை தனியார்மயமாக்கப்படுவதை மத்திய அரசு கைவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உறுதி அளித்தபடி ஊதியம் வழங்கவில்லை.. மத்திய அரசின் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்!