புது டெல்லி: இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக ஊடக தளங்களின் குறைதீர்க்கும் அலுவலர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராக தனிநபர்கள் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க மத்திய அரசு குறைகள் மேல்முறையீட்டுக் குழுவை அமைக்க உள்ளது.
இதற்கென சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களுக்கான விதிகள் 2021இல் திருத்தம் செய்யப்பட உள்ளது. இந்தச் சமூக ஊடக தளங்களின் குறைதீர்க்கும் அதிகாரிகளின் முடிவுகளுக்கு எதிராக புகார்களை தெரிவிக்கலாம்.
இதன்படி புகாரினை பெற்ற 30 நாள்களுக்குள் குழுவால் குறைகள் தீர்க்கப்படும். சமூக ஊடக விதிகளில் புதிய திருத்தங்கள் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு ஜூலை இறுதிக்குள் சட்டத்திருத்தம் செய்யப்படும். புதிய விதிகளின் படி குறைதீர்க்கும் அலுவலர் புகார்களை 15 நாள்களில் தீர்வு காண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நூபுர் ஷர்மா மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு