நாட்டின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்கும் முயற்சியில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் ஓராண்டுக்கு மேலாக தீவிர முனைப்பு காட்டிவருகிறது.
நஷ்டத்தில் இயங்கிவரும் ஏர் இந்தியாவை ஏலமிட்டு, அதன்மூலம் நிறுவனத்தின் கடனை அடைப்பதோடு இல்லாமல், லாபகரமாக தனியார் மூலம் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கான நெறிமுறைகளை வகுத்து, விற்பனைக்கான இறுதிகட்டத்தை தற்போது அரசு எட்டியுள்ளது. அதன்படி, ஏர் இந்தியா நிறுவன ஏலத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகளை இன்று அரசு திறக்கிறது.
இந்த ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனமும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் ஆகிய இருவரும் போட்டியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒப்பந்தத்தின் வெற்றியாளர் குறித்த முடிவை அக்டோபர் 15ஆம் தேதி அரசு வெளியிடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தத்தின் 85 விழுக்காடு தொகை கடனை அடைக்கவும், மீதமுள்ள 15 விழுக்காடு தொகை அரசுக்கு பணமாகவும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'செக் புக் செல்லாது' அக்டோபர் 1 முதல் வரும் முக்கிய மாற்றங்கள் இதோ