ETV Bharat / bharat

சீன ஆன்லைன் லோன் செயலிகள் முடக்கம்

இந்தியாவில் 232 ஆன்லைன் சூதாட்டம் மற்றும் லோன் செயலிகள் முடக்கப்பட்டுள்ளன.

சீன ஆன்லைன் லோன் செயலிகள் முடக்கம்
சீன ஆன்லைன் லோன் செயலிகள் முடக்கம்
author img

By

Published : Feb 5, 2023, 3:54 PM IST

டெல்லி: இந்தியாவில் 138 சூதாட்ட செயலிகள், 94 ஆன்லைன் லோன் செயலிகள் உள்பட 232 செயலிகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியது. சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவன செயலிகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகள் சூதாட்டம் மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும், முடக்கப்பட்ட செயலிகளின் விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை. நாடு முழுவதும் பல்வேறு ஆன்லைன் கடன் செயலிகள் மற்றும் சூதாட்ட செயலிகள் மூலம் பண மோசடி நடந்துவருகிறது. வாடிக்கையாளர்கள் ஆபாச மிரட்டல்களுக்கு உள்ளாகி பணத்தை இழந்துவருகின்றனர்.

ஆன்லைன் கடன் செயலிகள் மூலமாக வந்த மிரட்டல்கள் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் செயலிகளில் பெரும்பாலானவை ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்படாதவை. தன்னிச்சையாக செயல்படுபவை.

ஆகவே, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத நிறுவனங்களிடம் மக்கள் யாரும் கடன் பெற வேண்டாம். அதேபோல மிரட்டல்கள் வந்தால் சைபர் கிரைம் போலீசாரிடம் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. ஏற்கனவே வந்த புகார்களின் அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: இளைஞர்களே உஷார்:வெளிநாட்டு வேலை மோகம்..ஏமாற்றும் கும்பல் ஏராளம் - டிஜிபி அட்வைஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.