ETV Bharat / bharat

இன்னும் கோவிட்-19 ஓயவில்லை அதீத நம்பிக்கை ஆபத்தானது - எச்சரிக்கும் ராகுல்

author img

By

Published : Feb 17, 2021, 1:32 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று இன்னும் ஓயாத போதிலும், அரசு அலட்சியத்துடனும் அதீத நம்பிக்கையுடனும் செயல்படுகிறது எனக் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Congress leader Rahul Gandhi tweet
Congress leader Rahul Gandhi tweet

டெல்லி: கோவிட்-19 பெருந்தொற்றை அரசு சாதாரணமாகக் கையாளுவதாகக் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கரோனா நோய்க்கிருமியின் தென் ஆப்பிரிக்க, பிரேசில் வகைகள் இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கருத்தை ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். "கோவிட்-19 நடவடிக்கைகளில் மத்திய அரசு பெருத்த நம்பிக்கையுடன் மிகவும் அலட்சியமாக நடந்துகொள்கிறது. பெருந்தொற்று இன்னும் ஓயவில்லை" என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவில் முதன்முறையாக, ஆப்பிரிக்கா நாடுகளின் வகை கோவிட்-19 தொற்றுடன் நான்கு பேர் கண்டறியப்பட்டனர். அதில் ஒருவர் அங்கோலாவிலிருந்தும், மற்றொருவர் தான்சானியாவிலிருந்தும், இரண்டு பேர் தென் ஆப்பிரிக்காவிலிருந்தும் நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒருவருக்குப் பிரேசில் நாட்டு வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

ஹாட் டாபிக்காக மாறியுள்ள 'டூல்கிட்' - போலீஸ் ரேடாரில் வந்தது எப்படி?

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தில் தகவல்படி, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரத்து 610 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து நாட்டின் மொத்த பாதிப்பு ஒரு கோடியே ஒன்பது லட்சத்து 37 ஆயிரத்து 320ஆகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே ஆறு லட்சத்து 44 ஆயிரத்து 858 ஆகவுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 100 பேர் சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்ததால், மொத்த இறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 913ஆக உயர்ந்திருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.