கரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் பல முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
முக்கிய அறிவிப்புகள்
- சுகாதாரத்துறை மேம்பாட்டிற்கு ரூ.50 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும்
- மற்றத்துறைகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும்
- ரூ.1.25 லட்சம் வரையிலான சிறு கடன்களுக்கு 2% குறைவாகவே வட்டி நிர்ணயிக்கப்படும்
- அவசர கால கடன் உதவியாக தொழில்துறையினருக்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் அளிக்க முடிவு
- ஐந்து லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும்
- சுற்றுலாத்துறை மேம்பட்டிற்காக நாடு முழுவதும் உள்ள 10,700க்கும் மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள், அதன் அமைப்புகளுக்கு கடனுதவி வழங்கப்படும்.
- பாரத்நெட் மூலம் கிராமப்புற இணைய மேம்பாட்டிற்கு ரூ.19,041 கோடி ஒதுக்கீடு
- வேளாண் உர மாணியத்திற்கு கூடுதலாக ரூ.14,775 கோடி ஒதுக்கீடு
- 2021 மே முதல் நவம்பர் காலகட்டத்தில் இலவச உணவு தாணியத் திட்டத்திற்கு ரூ.93,869 கோடி ஒதுக்கீடு
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார்?