ETV Bharat / bharat

புதுச்சேரியில் முதன்முதலாக தமிழில் ஆளுநர் உரை - தமிழிசை சௌந்தரராஜன் - etv bharat

புதுச்சேரியில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழில் ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளேன் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Aug 24, 2021, 4:46 PM IST

புதுச்சேரி: சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 26ஆம் தேதி ஆளுநர் உரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று (ஆக.24) ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், "முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்த அழைப்பு விடுத்தார். புதுச்சேரியில் ஆகஸ்ட் 26ஆம் தேதி தமிழில் ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளேன். தெலங்கானாவில் தமிழில் ஆளுநர் உரை நிகழ்த்த முடியவில்லை.

முதலமைச்சர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு
முதலமைச்சர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு

தமிழில் ஆளுநர் உரை

ஆனால், புதுச்சேரி சட்டப்பேரவையில் முதன்முதலில் ஆளுநர் உரையை தமிழில் நிகழ்த்த உள்ளது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

முதலமைச்சர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு
முதலமைச்சர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு

கரோனா தடுப்பூசி

புதுச்சேரியில் திரையரங்குகள், மால்கள் தமிழ்நாட்டை காட்டிலும் முன்கூட்டியே திறக்கப்பட்டன. ஏனென்றால் புதுச்சேரியில் தடுப்பூசி 50 விழுக்காடு போடப்பட்டுள்ளது. இதற்காக சுகாதாரத் துறைக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதையும் படிங்க: சென்னையில் ஆக.26ஆம் தேதி மநீம ஆலோசனைக் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.